Categories
மாநில செய்திகள்

13 முதல் 60 வயது வரை உள்ள 39,911 பேர் கொரோனாவால் பாதிப்பு… தமிழக சுகாதாரத்துறை..!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வயது வாரியான எண்ணிக்கை விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், 12 வயதுக்கு கீழ் 2,444 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 முதல் 60 வயது வரை உள்ள 39,911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 26,782 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 20,706 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Categories

Tech |