வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் இருக்கலாம் என பைசர் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த முடியாமலும் தடுப்பூசி வினியோகத்தை சீர்படுத்த முடியாமலும் நாடுகள் திண்டாடி வருகின்றது. மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தற்போது தொற்றை கண்டறிந்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் தலைவர் Albert Bourla தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் வருடாந்திர தடுப்பூசி அவசியமாக இருக்கலாம் எனவும் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட மக்கள் அடுத்த 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் இது வெறும் கணிப்பு மட்டுமே இறுதியான முடிவு அல்ல எனவும் அவர் தெளிவாக கூறியுள்ளார்.