தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருக்கிறார்.
இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றார். 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக தமிழக முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கமான ஒரு நடைமுறைதான்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு எடுத்து வரக் கூடிய நிலையில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் பட்டுள்ளன என்பது குறித்து நேரடியாக தமிழக அரசு சார்பில் விளக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது. இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் பங்கேற்பார் என்று தெரிகிறது. கடந்த இரண்டு முறையும் இந்த சந்திப்பில் இவர்கள் பங்கேற்றனர்.