மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள இடையன்காட்டுவலசு பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காட்டுராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயது உடைய தன்ஷிகா என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த சிறுமி தன்ஷிகா கொரோனா நிவாரண நிதியாக தான் கடந்த ஒரு ஆண்டாக சேமித்து வைத்திருந்த பணத்தை வழங்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனை சந்தித்து சிறுமி தன்ஷிகா தனது தந்தை சண்முகவேல் உடன் இணைந்து தான் சேமித்து வைத்திருந்த பண உண்டியலை அப்படியே கலெக்டரிடம் வழங்கியுள்ளார். இந்த சிறு வயதிலேயே சிறுமியின் உதவி மனப்பான்மை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.