டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தேர்வில் சிவன்கையை சேர்ந்த மஃமூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு அரங்கினுள் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் நடைபெற்ற சென்னை மண்டல அளவிலான போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 11 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நேத்ரா,சண்முகப்ரியா ,சாரிகா ஆகியோர் வெற்றி பெற்று வரும் ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இதற்கான பயிற்சிகளை தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் .