இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரைநிகழ்ந்த இருக்கின்றார்
நேற்றைய தினம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இரவு ஒன்பது மணி வரை, சுமார் 6 மணி வரை இந்த ஆலோசனை நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் நேரடியாக பிரதமரிடம் பேசினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது முதல்வராக பிரதமருடன் ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக மட்டும் தமிழக முதல்வர் பேசி இருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது பிரதமர் அலுவலகம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் என்ற ஒரே வார்த்தையில் பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நரேந்திர மோடி நிச்சயமாக ஊரடங்கு நீட்டிப்பு சம்பந்தமாகவும், மக்கள் எந்த மாதிரியான நடந்துகொள்ள வேண்டும் போன்ற நிறைய முக்கியமான விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Shri @narendramodi will be addressing the nation at 8 PM this evening.
— PMO India (@PMOIndia) May 12, 2020