4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவ உள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அரசு டெலிகிராம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது தொலை தொடர்பு சேவையை விரைவில் நாடு முழுவதும் வெளியிடப்படும் என்று கடந்த புதன்கிழமை மக்களவையில் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி தெரிவித்திருந்தார்.
மேலும் இதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாக அவர் கூறினார். தற்போது ரயில்வே துறையும் தனது சேவைகளையும், சேவைத் தரத்தையும் மேம்படுத்தி வரும் நிலையில் ரயில்களிலும் இன்டர்நெட் சேவையை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் 5ஜி தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணி மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருப்பதாகவும் அது அடுத்த சில மாதங்களில் தயாராகி விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.