Categories
தேனி மாவட்ட செய்திகள்

4ஜி, 5ஜியை நடைமுறைபடுத்த வேண்டும்…. செல்பி எடுத்து ஆர்ப்பாட்டம்…. வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செல்பி எடுத்து நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சரியாக பராமரிக்க வேண்டும், 4ஜி, 5ஜி இணையதள சேவையை பி.எஸ்.என்.எல் சார்பில் வழங்க வேண்டும், தற்போது உயர்த்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் இணையதள சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாணவர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் என பலரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அப்போது சங்க நிர்வாகிகள் செல்பி புகைப்படம் எடுத்து நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |