இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் செல்பி எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்பி எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டமானது நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர துணைத்தலைவர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் செல்போன் இணைப்புகளுக்கு 4ஜி, 5ஜி சேவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.