பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் 4ஜி, 5ஜி இணைய சேவையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள தேவன்குடியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முறையாக பராமரிக்க வேண்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பாக 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவையை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதற்கு ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், திருமுருகன் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலரும் பங்கேற்றுள்ளனர். இதேபோல் கட்டுமாவடி, துறையூர், புறாக்கிராமம், எரவாஞ்சேரி, வாழ்மங்கலம், சியாத்தமங்கை ஆகிய 6 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.