Categories
மாநில செய்திகள்

4ம் தேதி இரவு 7 மணி முதல் 7ம் தேதி காலை 7 மணி வரை தடை… அதிரடி உத்தரவு…!!!!

புதுச்சேரியில் தேர்தலையொட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி  அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சியினரும் மக்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் புதுச்சேரியில் தேர்தலையொட்டி 4ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குழுவாக கூடுதல், நடனமாடுதல், பொதுக்கூட்டம் நடத்துதல், ஆயுதம் எடுத்துச் செல்லுதல், கோஷம் எழுப்புதல், ஒலிபெருக்கி வைத்தல் உள்ளிட்டவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |