Categories
தேசிய செய்திகள்

4ம் வகுப்பு மாணவியிடம்… அருவருக்கத்தக்க வீடியோவை காட்டி… தலைமையாசிரியர் செய்த கொடூர சம்பவம்…!!!

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அருவருக்கத்தக்க வீடியோவை காட்டி தலைமையாசிரியர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் சீதாபூரின் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தலைமையாசிரியர் அந்த மாணவியை அழைத்து பள்ளி வளாகத்தில் யாருமே இல்லாத ஒரு வகுப்பறைக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்று அந்த மாணவியிடம் தலைமை ஆசிரியர் அருவருக்கத்தக்க சில வீடியோவை காட்டியுள்ளார். இதை பார்த்த அந்த மாணவி தான் வெளியே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்பொழுது கதவை உள்பக்கமாக பூட்டி கொண்ட தலைமையாசிரியர் மாணவியிடம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பிறகு வீடு திரும்பிய அந்த மாணவி தனது தந்தையிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டபோது நான் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மாணவியை தவிர்த்து அவர் ஆசிரியர் மற்றும் வேறு சிலரிடமும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |