Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

4 அடி நீள மண்ணுளிப்பாம்பு… பத்திரமாக வனப்பகுதியில் விட்ட திருப்பத்தூர் வனத்துறையினர்..!!

திருப்பத்தூரில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விட்டு வந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனை அங்கு நின்றவர்களும், காவல்துறையினரும் பார்த்துள்ளனர். அதன்பின் அந்த மண்ணுளி பாம்பு குறித்து வனத்துறைக்கும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு திருப்பத்தூர் வனத்துறையினர் விரைந்து வந்துள்ளனர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். அதன் பின் அந்த மண்ணுளிப் பாம்பை ஒரு பையில் போட்டு கட்டி எலகிரிமலை வனப்பகுதியில் விட்டு வந்துள்ளனர்.

Categories

Tech |