Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

4 அம்ச கோரிக்கைகள்… வருவாய்துறை அலுவலகம் முன்பு… ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய்த்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலங்களில் 24 மணி நேரம் பணிபுரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தலைமை செயலக அலுவலர்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிகுமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட இணை செயலாளர் காசி விஸ்வநாததுரை, வட்டக்கிளை தலைவர் சரவணன், கீழக்கரை தாசில்தார் முருகேசன், துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம், தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் கீழக்கரை வருவாய் அலுவலக பணியாளர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |