Categories
அரசியல் மாநில செய்திகள்

” 4 ஆட்ட வித்து 5 லட்சத்துல வாட்ச் எப்படி?…. சொன்னா நாங்களும் வாங்குவோம்…. அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசியவாதி என்பதால் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்சை கட்டி இருப்பதாக கூறிய அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில்,நான்கு ஆடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று சொல்பவர் எப்படி ஐந்து லட்சம் மதிப்புள்ள வாட்சை வாங்கினார். ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கலாம். ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா அல்லது இதுவும் ஏமாற்று வேலையா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |