Categories
கிரிக்கெட் விளையாட்டு

4 ஆண்டுகளில் பெண்களுக்கான ஐ.பி.எல்….-கங்குலி

அடுத்து வரும் 4 ஆண்டுகளில்  திறமையான வீராங்கனைகளை கொண்ட  7 அணிகள் கொண்டு  ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

 

மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறன்து. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னராக பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட  20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்ற நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் வாரியதின்  தலைவரான சவுரவ் கங்குலி கொடுத்த ஒரு பேட்டியில், ‘மகளிருக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் ஏற்படும் சிக்கல்களை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.மகளிருக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு அதிகளவு  வீராங்கனைகள் இருக்க வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளில் சிறந்த வீராங்கனைகளை கொண்ட ஏழு அணிகளுடன் மகளிர் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்.

முதலாவதாக மாநில கிரிக்கெட் சங்கங்கள் திறமையான மகளிர் அணியை உருவாக்கிட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக  மகளிர் கிரிக்கெட் ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடையே கிடைத்து வருகிறன்து.மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நம்மளிடம் 150 முதல் 160 மகளிர் வீராங்கனைகள் இருப்பின் மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஆரம்பிப்பதற்கான செயல்களை முன்னெடுக்கலாம். தற்போது நம்மிடத்தில் 50 முதல் 60 மகளிர் வீராங்கனைகள் மட்டுமே இருக்கின்றார்கள்.இந்நிலையில்  இந்திய கிரிக்கெட் வாரியதின் நடவடிக்கையை அடுத்து பெண் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று கூறினார்.

Categories

Tech |