இந்தியாவில் சென்ற 2019 ஆம் வருடம் தேசிய கல்விக்கொள்கை திருத்தம் செய்யப்பட்டு புது கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டது. பள்ளியில் கற்றல் இடைநிற்றலிலிருந்து வெளியே சென்ற குழந்தைகளை மீண்டுமாக பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது புது கல்வி கொள்கையின் நோக்கமாகும். அத்துடன் இளைஞர்களும், பதின் பருவத்தினரும் 100 சதவீத கல்வியறிவு பெறுவதை இலக்காக கொண்டு புது கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் எம்பில் (M.phil) படிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு பதில் 4 வருடம் இளங்கலை பட்டபடிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புது நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் நான்காண்டு இளங்கலை படிப்புகள் அடுத்த வருடம் முதல் துவங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தின் சாரிடியோ மாவட்டத்திலுள்ள சோனாரி கல்லூரியின் பொன் விழா ஆண்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பித்து கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு அறிவு மற்றும் ஞானத்தை அளித்து முழு மனிதர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புது கல்விக்கொள்கையை நடைமுறைபடுத்துவதில் மாநிலக் கல்லூரிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் மாநிலத்தின் முன்னேற்றத்தில் நாமும் ஒரு பங்குதாரர்களாக மாறும் அடிப்படையில் மாணவர் சமுதாயம் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார். இந்த 4 வருடகால இளநிலை படிப்பை முடித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி நேரடியாக PhD படிப்பில் சேரலாம். அதுமட்டுமின்றி பல்கலைக்கழக மானியக் குழுவும் இந்த 4 ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.