ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 21 ரூபாய் அதிகரித்து 4,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 52.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.