Categories
தேசிய செய்திகள்

4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு…. கனிமொழி கண்டனம்….!!!!

ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படைப் பிரிவுகளில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கும் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டிக்கிறேன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |