தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான பொது மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்துகிறது.
அவ்வகையில் தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கிய நிலையில் முதற்கட்ட கலந்தாய்வு நாளையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 25 முதல் 27ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13 முதல் 15ஆம் தேதி வரையும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 29 முதல் 31ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.