Categories
கரூர் மாவட்ட செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பிள்ளபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்து வந்தது.

இந்நிலையில் முட்டைகள் பொரிந்து அடுத்தடுத்து பிறந்த 10 கோழிக்குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories

Tech |