Categories
உலக செய்திகள்

4 குழந்தைகளை தாய் கொன்றார்களா….? உடனே விடுதலை பண்ணுங்க…. 90 மருத்துவர்கள் அடங்கிய குழுவின் வாதம்…. காரணம் என்ன….?

ஆஸ்திரேலியாவில் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என 90 மருத்துவர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  போல்பிக்(53) என்பவர் 1989 மற்றும் 1999 இடையேயான காலக்கட்டத்தில் தனது நான்கு குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக நியூ சவுத் வேல்ஸ்ன் உச்சநீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. தற்போது கடந்த 18 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் போல்பிக்கு விடுதலை வழங்கக்கோரி அந்நாட்டு  90 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு மனு தாக்கல் செய்துள்ளது.

அவர்கள் அளித்த மனுவில் கடந்த ஆண்டு நடந்த மரபணு ஆய்வில் அவரது நான்கு குழந்தைகளும் இயற்கையாக இறந்து இருக்கலாம் என்பதை பரிந்துரைத்தது. மேலும் அவரின் இரு குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து CALM2 எனப்படும் மரபணு மாற்றத்தை பெற்றவர்கள் CALM2 மரபணு மாற்றம் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்தும் எனவும், மற்ற இரு குழந்தைகள் குழந்தைகளின் மரபணுக்கள் வேறுபட்ட மரபணு மாற்றத்தை கொண்டிருந்தனர் என்றும் அது தான் அவர்களின் இறப்புக்கு  காரணம் என நிபுணர்கள் குழுவால் கண்டுபிடிக்கபட்டது.

இந்த ஆய்வை நடத்திய 90க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள்  நியூ சவுத் வேல்ஸ்ன் ஆளுநருக்கு  போல்பிக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்த வழக்கு ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும் 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அந்தப் பெண்மணி விரைவில் விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

 

 

Categories

Tech |