நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூட்யூபில் 4 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஹன்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாஸ் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த டீசர் யூட்யூபில் அதிக லைக்குகளை பெற்ற இந்திய திரைப்பட டீசர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது இந்த டீசர் யூட்யூப் தளத்தில் 4 கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது.