Categories
சினிமா

4 கோடி பார்வையாளர்கள்… 80 லட்சம் லைக்… சுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது.. ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்..!!

சுஷாந்த் சிங் மீதும் ‘தில் பெச்சாரா’ மீதும் அன்பு மழை பொழிகிறது என்று  ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

மறைந்து போன பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா.முகேஷ் சப்ரா இயக்கியதில் உருவான இந்தப்படம் தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இத்திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஉருவாக்கியுள்ளது. இந்தப்படம் வருகின்ற ஜூலை 24 யில் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படுகிறது.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட குறுகிய நேரத்தில் 10 லட்சத்சுஷாந்த் சிங்கின் மறைவை  நினைவுகூறும் வகையில் தில் பெச்சாரா திரைபடம் ஹாட் ஸ்டார் தளத்தில் இலவசமாக ரசிகர்கள் பார்த்துக்கொள்ளலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த ஜூலை 6 தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதுக்கு அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளன. இதுவரை இப்படத்தின் ட்ரெய்லரை 4 கோடிக்கும் மேற்ப்பட்டோர் கண்டுகளித்ததோடு 80 லட்சம் லைக்குகளை பெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

உலகளவில் அனைவராலும் விரும்பப்பட்ட ட்ரெய்லர்களின் பட்டியலில் இப்படத்தின் ட்ரெய்லர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் மற்றும் ‘தில் பெச்சாரா’ படத்தின் மீதான அன்பு மழை பொழிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |