மாவட்டத்தில் பணிபுரியும் 4 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர், மாவட்டத்தில் பணிபுரியும் 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்பிரமணி என்பவரை வாழவந்திநாடு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.
மேலும் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணயுரிந்து வந்த கங்காதரன் நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்தனர். இதேபோல் மீதமுள்ள 2 சப்-இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.