Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4 சிக்ஸர்களை பறக்க விட்டு…… சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹிட்மேன்..!!

ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால், 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு 9:00 மணிக்கு மேல் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி 8 ஓவர் முடிவில் 90 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 (20) ரன்களும், பிஞ்ச் 31 ரன்களும்  எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணி 7.2 ஓவரில்4 விக்கெட்  இழந்து 92 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா 20  பந்துகளில் (4 சிக்ஸர், 4 பவுண்டரி) 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றிக்கு வித்திட்டார்.. இதன் மூலம் இரு அணிகளும் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற அந்த பெருமை ரோகித் சர்மாவுக்கு  கிடைத்தது. இப்போட்டிக்கு முன்னதாக நியூஸிலாந்து அணி வீரர் மார்ட்டின் கப்திலுடன் (172 சிக்ஸர்கள்) முதலிடத்தில் இருந்தார் ரோகித் சர்மா.. இருவரும் சரிக்கு சமமாக இருந்தனர்.

இந்நிலையில் தற்போது நேற்று 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் கப்திலின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா (176 சிக்ஸர்) ..

Categories

Tech |