தமிழகத்தில் கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இதற்கு பல்வேறு நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில் நான்கு சுவர்களுக்குள் பேரணி நடத்திக்கொள்ளச் சொல்லி ஆர்எஸ்எஸ்ஸுக்கு நிபந்தனை விதித்திருப்பது வேதனை அளிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியுள்ளார். தாமாக முன்வந்து பிரதிபலன் எதிர்பாராமல் நாட்டுக்கு சேவையாற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் பேரணிக்கு, கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளாவில்கூட தடை விதிக்கப்படவில்லை என்பதை காடேஸ்வரா சுட்டிக்காட்டியுள்ளார்.