Categories
தேசிய செய்திகள்

4 செல்போன்கள்… 250 அழைப்புகள்… பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கையா..? தொடரும் தீவிர விசாரணை…!!!

சசிகலா அவர்கள் பெங்களூர் சிறையில் இருந்த பொழுது அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த சனவரி மாதம் விடுதலையானார். அவர் சிறையில் இருந்தபோது சட்டவிரோதமாக அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக அதிகாரிகளுக்கு அவர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படையினர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தண்டனை காலத்தின்போது சசிகலா சட்டவிரோதமாக செல்போன்களை பயன்படுத்தியதாகவும், சிறை அதிகாரிகள் செல்போன்களை பறிமுதல் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சசிகலா சிறையிலிருந்த போது நான்கு செல்போன்களை பயன்படுத்தி 250க்கும் மேற்பட்ட அழைப்புகளை பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த உண்மை தன்மையை அறிவதற்கு 4 செல்போன்களை பெங்களூர் மடிவாளாவில் தடய அறிவியல் பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதனை பரிசோதனை செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |