Categories
மாநில செய்திகள்

4 நாட்களும் மாணவர்களுக்கு…. தாய், தந்தையாக இருப்பேன்…. துபாய் செல்லும் முன் அமைச்சர் பேட்டி….!!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டியது. ஆனால் ஒமைக்ரான் காரணமாக அழைத்துச் செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.

சர்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றிக்காட்ட இருக்கிறோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன். மாணவர்களை சிஎஸ்ஆர் நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லுவோம் என்று பேசி உள்ளார்.

Categories

Tech |