தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காகவும் துறை சார்ந்த செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிக குறைவாக உள்ளது. முதல்வர் அவர்கள் வெளியூர் சென்றால் தலைமை செயலகத்திற்கு யாரும் வருவதில்லை.
இதனால் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தலைமை செயலகம் வந்து தங்கள் துறை பணிகளை மேற்கொள்கிறார்களா என்பதை கவனிக்க தொடங்கியுள்ளார். மேலும் அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை குறைந்தது நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகம் வந்து பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.