Categories
மாநில செய்திகள்

4 நாட்கள் டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்…. பின்னணி என்ன?…. வெளியான தகவல்….!!!!

நேற்று அதிகாலை துபாய் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளிலும் நேற்று காலை முதலே பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டெல்லி நோக்கி நான்கு நாள்கள் பயணமாக செல்லும் முதல்வர் ஸ்டாலின் நாளை மதியம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் மேகதாட்டு அணைக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது, நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது, தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை விடுவிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை மாலை சந்தித்து பேச உள்ளார். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 1ஆம் தேதி சந்திக்கிறார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெறுகிறது. தற்போது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Categories

Tech |