தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்த நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளன. அதன்படி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு வரை, அதாவது காலை 8 மணிக்கு முன்பாக தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் செலுத்தலாம். தபால் வாக்குகளை செலுத்துவதற்கு முன்பாக அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் போன்றோரிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.