Categories
தேசிய செய்திகள்

4 நாட்கள் வங்கிகள் இயங்காது… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியா முழுவதிலும் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்குவது ஆக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய ஐக்கிய மன்றம் வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் நாட்டின் 9 வங்கி தொழிற்சங்கங்களை சேர்ந்த பல லட்சம் பணியாளர்கள் ஈடுபடுவர் என்பதால் முழு நாட்டையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 13 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 14ஆம் தேதி ஞாயிறு சேர்த்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக அதிகம் வாய்ப்புள்ளது. எனவே வங்கிகளில் ஏதாவது முக்கிய தேவைகள் இருந்தால் உடனே முடித்துக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Categories

Tech |