ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல உலக நாடுகள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நல்ல லாபமும் நிறுவனங்களுக்கு கிடைத்ததால் இந்த முறையை பின்பற்ற அனைத்து நாடுகளும் அங்கீகரித்தது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தில் வெற்றி கண்டது.
இதனை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இதில் முதலாவதாக ஸ்பெயினில் இனி வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அங்கீகாரம் செய்ய முடிவு செய்துள்ளது. இது வேலை நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இதை நடைமுறைப்படுத்த அந்நாடு முடிவெடுத்துள்ளது.