பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச்சட்ட திருத்த மசோதா 2021-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அடிப்படையில் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறு வேலை நிறுத்தத்திற்கு பல ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் வங்கிச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்த நாட்களில் அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வங்கி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் எஸ்பிஐ வங்கியின் பணிகள் குறைந்தளவில் பாதிக்கப்படலாம் எனவும் இதன் மூலம் ஏற்படக்கூடிய இழப்பை கணக்கிட முடியாது எனவும் SBI தெரிவித்துள்ளது.
இதனிடையில் மார்ச் 26 (2-வது சனி) மார்ச் 27 (ஞாயிறு) ஆகியவை வழக்கமான விடுமுறை மற்றும் மார்ச் 28,29- ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மார்ச் 26 முதல் 4 நாட்களுக்கு செயல்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.