Categories
தேசிய செய்திகள்

4 நிமிடம் 23 வினாடிகளில்…. 195 நாடுகளின் பெயர்கள் & தலைநகரங்கள்…. கின்னஸ் சாதனை படைத்த 5 வயது சிறுமி…!!

சிறுமி ஒருவர் 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களையும் 4 நிமிடம் 23 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார்.

துபாயை சேர்ந்த பிரானவி குப்தா என்ற 5 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்துள்ளார். இவர் தற்போது ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களையும் நான்கு நிமிடம் 23 வினாடிகளில் மூச்சி விடாமல் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இவருடைய இந்த சாதனை தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து சிறுமி பிரானவி குப்தா தொடர்ந்து தன்னுடைய பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை கூறியுள்ளார். மேலும் சாதனை புரிவதற்கான பயிற்சிகளை சிறுமி எடுத்து வருவதாக அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

  

Categories

Tech |