இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்களுக்கு 4 விக்கெட்டில் ஆட்டத்தை முடிக்க இங்கிலாந்தால் வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3க்கு, 2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முழுமையாக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முழு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் இருந்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆட்டத்தின் 20-வது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் ஜோர்டன், 3-வது பந்தில் சாம் பில்லிங்ஸ், 4-வது பந்தில் அடில் ரஷித், 5-வது பந்தில் சஹிப் மஹ்மத் ஆகியோரை அவுட்டாக்கினார். இதன் மூலம் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் உலகளவில் 4வது வீரர் என்ற சாதனையை ஜேசன் ஹோல்டர் படைத்துள்ளார்.