ஜெர்மனி மருத்துவமனையிலிருந்து 4 நபர்களை பிணமாக மீட்ட சம்பவத்தில் காவல்துறையினர் பெண்ணை கைது செய்தனர்.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை தாக்கியதில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 5 பேரையும் மீட்டதோடு மட்டுமல்லாமல் காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் காவல்துறையினர் மருத்துவமனை ஊழியரான பெண்ணை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெர்மனியிலிருக்கும் ஊடகங்கள் இவர் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.