Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 பேரை திருமணம் செய்து மோசடி….. வாய்ஸ் மெசேஜால் சிக்கிய பெண்….. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!

கமிஷனுக்காக பெண் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பகவுண்டர்புதூரில் செல்வராஜ்- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கைத்தறி நெசவு தொழிலாளியான சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது புரோக்கர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா என்பவரை பெண் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். சரிதாவின் தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், திருமணமான அண்ணன் கேரளாவில் இருப்பதாகவும் சரிதா கூறியுள்ளார்.

இந்நிலையில் ஈரோட்டில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கி பேப்பர் கேன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் சரிதாவுக்கு ஆதரவாக அவரது பெரியம்மா விஜயலட்சுமி என்பவர் இருக்கிறார். இதனால் ஆதரவற்ற பெண்ணாக இருக்கும் சரிதாவை கடந்த ஆகஸ்ட் மாதம் சரவணன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பெண் பார்த்த 8 புரோக்கர்களுக்கு சரவணன் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கமிஷனாக கொடுத்து வாழ்க்கையை தொடங்கினார். இதனை அடுத்து எதேச்சையாக ஒரு நாள் சரவணன் சரிதாவின் செல்போன் பார்த்தபோது வாட்ஸ் அப்பில் விஜயலட்சுமிக்கு சரிதா இரண்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில் “எல்லோரும் இருப்பதால் பிரீயாக என்னால் பேச முடியாது. இந்த வாரம் நான் ஊருக்கு போக வேண்டும். மருத்துவமனைக்கு போகணும். பார்க்க ஆள் இல்லை ஏதாவது பொய் பொய் சொல்லு. நீயாக வந்து என்னை அழைச்சிட்டு போகிற மாதிரி வா. ஊருக்கு போய் குழந்தைகளை பார்த்துட்டு வரேன். வேறு ஏதாவது கனெக்ஷன் இருக்கான்னு பாரு. ஒரு வாரத்தில் போயிட்டு ரிட்டன் இங்க வரணும். இங்கே இருந்தா காசு பணம் சம்பாதிக்க முடியாது. இந்தப் பையன் ரொம்ப பாசமா இருக்காங்க. விட்டுட்டு போகவும் மனசு இல்ல. கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் எல்லாத்தையும் சொல்லிடலாம் என்ற முடிவில் இருக்கேன்” என கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன் தனது மனைவி மோசடி கும்பலைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் மோசடி கும்பலை பிடிக்க திட்டமிட்டார். அதன்படி சரிதாவிடம் எனது நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும். உனது பெரியம்மாவை பார்க்க சொல் என கூறியுள்ளார். அதன்படி கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் புகைப்படத்தை சரிதாவின் பெரியம்மா அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என சரவணன் கூறியுள்ளார். அதன்படி 80,000 கமிஷன் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுடன் நாசப்பகவுண்டன் புதூருக்கு வந்த பெரியம்மாவை சரவணன் மடக்கி பிடித்தார்.

அப்போது திருமணம் ஆகாத வாலிபர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறி வைத்து கமிஷனுக்காக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சரிதா, விஜயலட்சுமி, அந்த பெண் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது சரிதா ஏற்கனவே லாரி ஓட்டுனரை திருமணம் செய்து 2.5 லட்ச ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுவரை சரிதா 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |