Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

4 மணி நேரத்தில்… 4,00,00,000 ரூபாய்… ஆடுகளின் விற்பனை அமோகம்..!!

தீபாவளியை முன்னிட்டு 4 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்..

தீபாவளியை முன்னிட்டு கடலூர் அருகே உள்ள வேப்பூர் வார சந்தையில் நான்கு மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது. திட்டக்குடி அடுத்துள்ள வேப்பூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் வேப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்ததால் ஆட்டுச்சந்தை களைகட்டியது.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரையில் நான்கு மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் வாரச் சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருபவர்களிடம் இதுவரை வேப்பூர் ஊராட்சி சார்பில் ஒரு ஆட்டிற்கு 30 ரூபாய் வசூல் செய்துள்ளனர். ஆனால் இன்று சந்தையில் ஒரு ஆட்டிற்கு தலா 60 ரூபாய் வசூல் செய்வதாகவும் ரசீதில் ஆடுகளின் எண்ணிக்கை மட்டும் குறிப்பிடுவதாகும், தொகையை எழுதாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |