மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில்வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியதோடு, சிறிது நேரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் காடுவெட்டாங்குறிச்சி, உடையார்பாளையம், ஆதிச்சனூர், சோழங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.