தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 4 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த வருடமே சேர்க்கை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Categories