ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 4 மாதங்களில் 4வது முறையாக நிரம்பி வழிகிறது .
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானி ஆறு மற்றும் மாயா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது .105அடி உயரம் உள்ள அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது .அணைக்கு 1935 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் நிலையில் 3100 கனஅடி வெளியேற்றப்பட்டுள்ளது .
1955ஆம் ஆண்டு முதலாக அணை வரலாற்றில் முதன்முறையாக 4மாதங்களாக அணை முழு கொள்ளளவு நீடிக்கிறது .இந்நிலையில் வரும் 15ஆம் தேதிக்கு பிறகு 2ஆம் போக எள் ,கடலை பயிருக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .