தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்பவரும் கடந்த வருடம் திருமணம் காதல் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஞானதீபம் 4 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அந்தோணி முத்து காவல்நிலையத்தில் தனது கர்ப்பிணி மனைவி ஞானதீபத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார் இதுகுறித்து காவல்துறை விசாரணையில், ஞானதீபம் அந்த பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆண் ஒருவரோடு வந்திருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து தன்னுடைய குடும்பத்தாரோடு காவல் நிலையத்திற்கு சென்ற அந்தோனிமுத்துவிடம்அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஜெயசீலன், உனது மனைவியின் கர்ப்பத்திற்கு காரணம் பிரதீப் தான். எனவே ஞானதீபம் மேஜர் என்பதால் அவருடன் செல்ல விரும்புகிறார் அதனால் அவருடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறி ஞானதீபம் மற்றும் பிரதீப்பை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அந்தோணி முத்துவின் தந்தையை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய மனைவி வேறு நபருடன் சேர்த்து வைத்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோணி முத்து கூறினார். மேலும் பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யா தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.