Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 மாத குழந்தை 1 1/2 லட்சத்துக்கு விற்பனை…. ஆன்லைனில் வந்த புகார்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

கள்ளத்தொடர்பு மூலம் பிறந்த குழந்தையை 1 1/2 லட்சத்திற்கு விற்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் வசித்து வரும்  குழந்தை நல குழு உறுப்பினர் லலிதா  காவல்துறையினருக்கு ஆன்லைனில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியது,  பெரம்பலூரை சேர்ந்த உதயா என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் சென்னை எழும்பூர் மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்தது உள்ளது.  அந்தக் குழந்தையை பணத்திற்காக விற்ற அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த  புகார் மனு மீது விசாரணை நடத்துவதற்க செம்பியம் காவல்துறை  இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் காவல்துறையினர்  உதயாவை தேடி கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் உதயா தனது கணவர் மணிகண்டனுடன் பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் வசித்து வந்துள்ளனர். இந்த  தம்பதியருக்கு 7 வயதில் மகன்  உள்ளான். ஆனால்  இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரித்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் பாபு என்பவருடன் உதயாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது.பின்னர் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்  ஆண் குழந்தை பிறந்தது உள்ளது. பிறந்து  4 மாதம் ஆன குழந்தையை உதயா  ஆலந்தூரில் வசித்து வரும் ஜான்சிராணி மூலம் ஈரோட்டை சேர்ந்த சவிதா என்பவரிடம்  ரூ.1½ லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.

 

இதனையடுத்து  இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு சவீதாவிடம் இருந்த ஆண் குழந்தையை மீட்டதோடு உதயா,தரகராக செயல்பட்ட ஜான்சிராணி மற்றும் சவீதா ஆகிய  3 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

 

 

 

 

 

Categories

Tech |