Categories
தேசிய செய்திகள்

4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி…. உ.பி.யில் பிரபலமாகும் “புல்டோசர் டாட்டூ”…..!!!!!

அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட 5 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றி அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது. இதனால் அங்குள்ள மக்கள் மத்தியில் புல்டோசர் டாட்டூ பிரபலமடைந்து வருகிறது.

கடந்த தேர்தல்களின்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் பாபா என்று சமூக வலைத்தளங்களில் அழைக்கப்பட்டார். அந்த மாநிலத்தில் உள்ள சட்டவிரோத கட்டங்கள் பலவற்றை புல்டோசர் வாயிலாக இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் சமூகவலைத்தளங்களில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |