தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது.
மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து ஒரு முடிவினை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா மிக அதிகமாக இருக்கக் கூடிய நிலையில் இந்த நான்கு மாவட்டங்களிலும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.