வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்க்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.