Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்கள்… மக்களை வெளியே வராதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் மன்னார் வளைகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கடலூர், நாகை, ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும். மேலும் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |