Categories
சினிமா தமிழ் சினிமா

4 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’… வெளியான செம மாஸ் தகவல்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் திரைப்படம் நான்கு மொழிகளில் ரிலீஸாகவுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்பீம் படத்தில் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது .

Jai Bhim first look trending: సూర్య ఫస్ట్‌లుక్ పోస్టర్ వైరల్.. సోషల్  మీడియాలో రచ్చ! | Jai Bhim First look poster trending: Suriya39 poster goes  viral - Telugu Filmibeat

இதில் பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக சூர்யா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ‌. இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |